2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோசடிக் குற்றஞ்சாட்டப்பட்டார் ஜனாதிபதி தெமர்

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸில் ஜனாதிபதி மிஷெல் தெமர், இலஞ்சத்தை ஏற்றுக் கொண்டதாக, பிரேஸிலின் சட்டமா அதிபரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.   

மோசடியில் சிக்கியுள்ள பாரிய இறைச்சி வணிக நிறுவனமான ஜெ.பி.எஸ்-இன் தலைவரான ஜொயெஸ்லி பட்டிஸ்டாவிடமிருந்தே, பணத்தைப் பெற்றுக் கொண்டதாக, ஜனாதிபதி தெமர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.   

உச்ச நீதிமன்ற நீதியரசரொருவருக்கு, தற்போது குற்றச்சாட்டுகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபைக்கு இவை அனுப்பப்பட வேண்டுமா என அவர் தீர்மானிப்பார்.   

பின்னர், கீழ்ச் சபைக்கு இது சென்றால், ஜனாதிபதி தெமர் விசாரிக்கப்பட வேண்டுமா என கீழ்ச் சபை வாக்களிக்கும். எனினும், ஜனாதிபதி தெமருக்கெதிரான விசாரணை முடக்கப்படுவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என, ஜனாதிபதி தெமரின் கூட்டணி எதிர்பார்க்கின்றது.   

ஜனாதிபதி தெமருக்கெதிரான, முதலாவது உத்தியோகபூர்வமான குற்றச்சாட்டுகள் இவையே என்ற நிலையில், அடுத்த வாரம், மேலும் குற்றச்சாட்டுகளை, ஜனாதிபதி தெமர் எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .