2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோடியும் இம்ரான் கானும் தொலைபேசியில் உரையாடினர்

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து, தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நேற்று (30) மாலை உரையாடிய இருவரும், பிராந்திய சமாதானம் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜூலை 25ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இருவரும் உரையாடிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.

இந்த உரையாடலின் போது, “முழு அயல் பிரதேசங்களிலும், சமாதானமும் அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுமென்ற தன்னுடைய தூரநோக்கை, பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்” என, இந்திய வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்தது.

மில்லியன் கணக்கானோரை வறுமையிலிருந்து மீட்பது தொடர்பில் இரு நாடுகளும் கவனஞ்செலுத்த வேண்டுமென, இம்ரான் கான் தெரிவித்தார் என, அவரது ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஒன்றுக்கொன்று பகை நாடுகளாக உள்ள இரு நாடுகளும், சமாதானத்தை நோக்கிச் செல்ல வேண்டுமென, இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபுடன், சிறந்த உறவை, பிரதமர் மோடி கொண்டிருந்தார் எனக் கருதப்படுகிறது. இவற்றுக்கு மத்தியிலேயே, இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .