2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

யமீனின் மனு நிராகரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு கோரி, அத்தேர்தலில் தோல்வியடைந்த, அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீனின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தோல்வியை அவர் ஏற்றிருந்தாலும், தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு, பின்னர் கடந்த வாரம், மனுத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், மோசடிகள் இடம்பெற்றன என்பதை நிரூபிப்பதற்கு, அவரின் தரப்புத் தவறிவிட்டது எனத் தெரிவித்த 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதன் காரணமாக, கடந்த சில நாள்களாகக் காணப்பட்ட பதற்றமான நிலைமை, மாலைதீவுகளில் தணிந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .