2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யுரேனியச் செறிவூட்டலை அதிகரிக்கவுள்ள ஈரான்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானிய அரசாங்கமானது அந்நாட்டின் அணு நிலையங்களை ஐக்கிய நாடுகள் சோதனையிடுவதை இடைநிறுத்துமாறும், இரண்டு மாதங்களில் தடைகள் நீக்கப்படா விட்டால் 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்த எல்லையை விட யுரேனிய செறிவூட்டலை அதிகரிக்குமாறும் கோரும் சட்டமொன்றை அந்நாட்டின் பாதுகாவலர் சபை நேற்று அங்கிகரித்துள்ளது.

இச்சட்டமூலமானது ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கிகரித்திருந்தது.

புதிய சட்டத்தின்படி அரசாங்கமானது 20 சதவீதம் வரையில் யுரேனியம் செறிவூட்டலை ஆரம்பிக்க வேண்டும் என்பதோடு, நதன்ஸ் மற்றும் பொர்டெள அணு நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட மையவிலக்கிகளை நிறுவ வேண்டும்.

அணு ஒப்பந்தத்தின்படி 3.67 சதவீதம் வரையிலேயே யுரேனியத்தை ஈரான் செறிவூட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X