2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யுத்தநிறுத்தத்துக்கு இணங்கிய கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 மே 02 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிர்கிஸ்தானும், தஜிகிஸ்தானும் முழுமையான யுத்தநிறுத்தத்துக்கு நேற்று இணங்கியுள்ளன.

புதிய சூடுகள், படைகள் குவிக்கப்படுவதான அறிக்கைகளைத் தொடர்ந்தே இவ்வாறு யுத்தநிறுத்தத்துக்கு இணங்கியுள்ளன.

இவ்வாரம் எல்லை மோதல்களில் 49 பேர் கொல்லப்பட்டதையடுத்தே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

எல்லையில் தமது பகுதிகளிலுள்ள வாகனங்களின் மீது தஜிகிஸ்தான் படைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கிர்கிஸ்தான் எல்லைக் காவலர் சேவை தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே, கிர்கிஸ்தானில் இடம்பெற்ற இணைந்த செய்தியாளர் மாநாடொன்றில் தஜிகிஸ்தானின் தேசிய பாதுகாப்புச் செயற்குழுவின் தலைவர் சைமுமின் யடியேவ், கிர்கிஸ்தானின் பாதுகாப்புச் சபையின் தலைவர் கம்சிபெக் தஷியெவ் ஆகியோர் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்திர்ருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .