2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘யேமனில் 30 பேர் பலி; 80 பேர் காயம்’

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியால், யேமனிலுள்ள எதிரணிப் போராளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 80 பேர் காயமடைந்தனர் எனவும், எதிரணியின் தொலைக்காட்சியான அல்-மசிரா தெரிவித்தது.

தலைநகர் சனாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டனர் என, இத்தொலைக்காட்சி ஆரம்பத்தில் தெரிவித்ததோடு, கொல்லப்பட்ட அனைவரும், சிறைக்கைதிகள் எனவும் குறிப்பிட்டிருந்தது. எனினும், அவ்வெண்ணிக்கையை, 30ஆக பின்னர் அதிகரித்தது.

இவ்வெண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பின்பு, உயிரிழந்தவர்களில் ஹூதி போராளிகளும் உள்ளடங்குகின்றனரான என்ற விடயத்தை, அத்தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருக்கவில்லை.

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், யேமனில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தப் போரை,  முட்டாள்தமான போர் என அழைக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், இதை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோருகின்ற போதிலும், தாக்குதல்களும் மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.

அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர், இத்தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, பல சடலங்களை, ஹூதி போராளிகள் கொண்டு சென்றமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது எனவும், கட்டடங்கள் மோசமாகச் சேதமடைந்திருந்தன என்றும் குறிப்பிட்டார்.

பல தாக்கதல்கள் இடம்பெற்றன எனத் தெரிவிக்கும் தகவல் மூலங்கள், முதலாவது தாக்குதலில், சிறைச்சாலையில் ஒரு பிரிவு முழுமையாகச் சேதமடைந்தது எனவும், இரண்டாவது தாக்குதலில், சிறைச்சாலை கிட்டத்தட்ட முழுமையாகவே அழிவடைந்தது எனவும் தெரிவிக்கின்றன. மேலும் சில தாக்குதல்களும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .