2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யேமன் சிறைச்சாலைகளில் போர்க் குற்றங்கள்?

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தால், யேமனில் நடத்தப்பட்டு வரும் சிறைச்சாலைகளில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, இவ்வாறான மீறல்கள், போர்க் குற்றங்களாக அமையக்கூடுமெனவும் எச்சரித்துள்ளது.

தெற்கு மேயனின் பல்வேறு பகுதிகளில், உத்தியோகபூர்வமற்ற பல சிறைச்சாலைகள் நடத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்ட மன்னிப்புச் சபை, காணாமலாக்கச் செய்தல், சித்திரவதை உட்பட, அங்கு மிகமோசமான மீறல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்தது. எனவே, இவ்விடயங்கள் குறித்து, ஐக்கிய அரபு அமீரகமும், ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட அதன் தோழமை நாடுகளும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அச்சபை கோரியுள்ளது.

யேமனில் இடம்பெற்றுவரும் ஆயுத முரண்பாட்டில், அரபுக் கூட்டணி பங்குபற்றுவதோடு, அவற்றின் பின்னணியிலேயே இச்சிறைச்சாலைகள் இயக்கப்படும் நிலையில், போர்க் குற்றங்களாக அவை கருதப்பட வேண்டும் என, மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது.

ஆனால், தெற்கு யேமனில், எந்தவிதமான சிறைச்சாலைகளையும் நடத்தவில்லை என, ஐக்கிய அரபு அமீரகம் மறுத்து வருகிறது.

யேமனில், 2015ஆம் ஆண்டு சவூதி அரேபியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கு முக்கியமானது. ஆனால் இப்போரில், அரபுக் கூட்டணியும் சரி, எதிராகப் போரிடும் ஆயுததாரிகளும் சரி, பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர் என, தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .