2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யேமன் போரில் சவூதிக்கு உதவுவதை நிறுத்த காங்கிரஸ் ஒப்புதல்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



சவூதி அரேபியா தலைமையில் யேமனில் போரில் ஈடுபட்டுவரும் இராணுவக் கூட்டணிக்கான ஆதரவை விலத்திக் கொள்வதற்கு, ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. அந்நாட்டின் செனட்டும், இதேபோனறதொரு தீர்மானத்துக்காக ஏற்கெனவே இதற்கு வாக்களித்திருந்தது.

ஜனநாயகக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபையில், 248-177 என்ற வாக்குகள் அடிப்படையில், இது நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த 30 நாள்களுக்குள், பிரதிநிதிகள் சபையின் வடிவத்துக்காக, செனட் வாக்களிக்கவுள்ளது. அங்கும் இது நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, காங்கிரஸின் இரண்டு சபைகளும் இதற்கு ஒப்புதலுடன் காணப்படுகின்ற போதிலும், இந்த ஏற்பாட்டை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது "வீற்றோ" அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான எச்சரிக்கையை அவர் ஏற்கெனவே விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் "வீற்றோ"வை இல்லாது செய்வதற்கு, காங்கிரஸின் இரண்டு சபைகளும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும். பிரதிநிதிகள் சபையில் அதற்காக 290 வாக்குகளும் செனட்டில் 60 வாக்குகளும் தேவையாகவுள்ளன. இதனால், ஜனாதிபதியின் "வீற்றோ"வைத் தடுக்க முடியாது போகுமென்றே கருதப்படுகிறது.

சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணியால் யேமனில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை காரணமாக, யேமனின் உள்நாட்டுப் போர், புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது. இதன் காரணமாக, உலகின் மாபெரும் மனிதாபிமான நெருக்கடி யேமனில் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணிக்கு ஐ.அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவது தொடர்பாக, உள்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .