2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ராக்கைனில் 200 கட்டடங்கள் எரிந்ததை வெளிப்படுத்திய புகைப்படங்கள்

Editorial   / 2020 மே 27 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரின் மேற்கு ராக்கைன் மாநிலத்திலுள்ளதொரு ராக்கைன் கிராமத்தில் அண்மைய வாரங்களில் 200 வீடுகளும், ஏனைய கட்டடங்களும் தீயால் அழிவடைந்ததை செய்மதிப் புகைப்படங்கள் காண்பித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

லெட் கார் கிராமத்தின் எரிப்பானது அண்மைய ஆண்டுகளில் றோகிஞ்சா கிராமங்களின் மீதான மியான்மார் இராணுவ எரிப்பின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதிப் பணிப்பாளர் பில் றொபேர்ட்ஸன், அறிக்கையொன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

என்ன நடைபெற்றதென்பதை அறியவும், காரணமானவர்களைத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட கிராமத்தவர்களுக்கு நட்டயீட்டை வழங்கவும் நேர்மையான பக்கச்சார்பற்ற விசாரணையொன்று அவசரமாகத் தேவையென பில் றொபேர்ட்ஸன் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .