2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ரஷ்யர்களை 2016ஆம் ஆண்டு சந்தித்தார் மகன்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தேர்தல் போட்டியாளரான ஹிலாரி கிளின்டன் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக, ட்ரம்ப் கோபுரத்தில் 2016ஆம் ஆண்டு ரஷ்யர்களை தனது மகன் சந்தித்தை நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது முழுமையாக சட்டரீதியானதெனவும் அரசியலில் எல்லா தடவையும் நடைபெற்றுள்ளது எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்பதாக, ரஷ்யச் சிறுவர்களை அமெரிக்கர்கள் பொறுப்பேற்றுக் கொள்வது பற்றியதே குறித்த சந்திப்பென ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஷ்யாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள வழக்கறிஞர் உட்பட ரஷ்யர்களைச் சந்தித்ததுக்காக ட்ரம்பின் மூத்த மகனான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் சட்டச் சிக்கலில் சிக்கலாம் என்ற கவலையில் காணப்படுவதாக வொஷிங்டன் போஸ்ட், சி.என்.என்னின் செய்திகளையும் ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்துள்ளார்.

இதுதவிர, குறித்த சந்திப்பை தான் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என தான் முன்னர் கூறியிருந்ததையும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

எதிராளிகளின் தகவல்களைப் பெற பிரசார முகாம்கள் வழமையாக எதிர்பார்க்கின்றபோதும் ஐக்கிய அமெரிக்காவால் எதிராளியாக நோக்கப்படுகின்ற ரஷ்யாவின் பிரதிநிதிகளிடமிருந்து தகவல்களைப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, குறித்த சந்திப்பு இடம்பெறும்போது ஐக்கிய அமெரிக்காவின் தடைக்கு கீழேயே ரஷ்ய அதிகாரிகள் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ட்ரம்பின் பிரசார முகாமின் உறுப்பினர்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைத்து ஜனாதிபதித் தேர்தலை அவருக்கு சாதமாக்க உதவினரா என விசாரணை செய்துவரும் சிறப்பு வழக்குத் தொடருநர் றொபேர்ட் மல்லர், நியூயோர்க்கிலுள்ள ட்ரம்ப் கோபுரத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் திகதி, டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கும் ஏனைய பிரசார உதவியாளர்களுக்கும் ரஷ்யக் குழுவொன்றுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பையும் நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .