2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளதாரத் தடைகள்?

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்காத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹெலே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்க திறைசேரி திணைக்களம் வெகுவிரையில் புதிய அறிவித்ததலை வெளியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சிரியாவில் இனிமேலும் இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம்" என ஏற்கனவே அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த புதிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் கடந்த 7ஆம் திகதி இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தத் தாக்குல் தொடர்பில் ஆராய இரசாயன ஆயுத தடைக்கான அமைப்பின்  நிபுணர்கள் குழு ஒன்று தற்போது அந்த நாட்டில் ஆய்வுப்பணிகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில, ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று  ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்றது.  இதன்போது ரஷ்யாவால் கொண்டுவரப்பட்ட இரசாயனத் தாக்குதல் தொடர்பிலான பிரேரணை தோல்வியடைந்தது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய  ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர்,  நிக்கி ஹெலே,, “சிரியாவில் இனியும் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த நாட்டில் ஏவுகணைத் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளோம்”எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்,  உரையாற்றிய, ரஷ்ய தூதர் வாசிலி நிபென்சியா, “அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. உலகம் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் எனக் குறிபிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .