2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ராஜீவ் காந்தி கொலை விவகாரம்: நளினியின் வழக்கு தள்ளுபடி

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து, ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி நளினியால், கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு, இன்று (18) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, நளினியின் வழக்கு, விசாரணைக்கு பொருத்தமற்றது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவர் கடந்த 28 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இது தொடர்பான தீர்மானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X