2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘றோகிஞ்சாக்களை அனுமதித்தால் அகதிகளின் தலைநகரமாக மாறும்’

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகத்தில், அகதிகளின் தலைநராக இருப்பதை விரும்பவில்லை என்று, இந்திய மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில், நேற்று (31) தெரிவித்துள்ளது.  

மியான்மாரில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வெளியேற்றப்படும் தங்களது குடிமக்களை, இந்திய எல்லைக்குள் உள்ள படையினர், மீண்டும் பின்னால் தள்ளுகின்றனர் என்று, றோகிஞ்சா குடிமகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த மனுவில், தங்களது குடிமக்கள், துப்பாக்கிமுனையாலும் மிளகாய்த் தெளிப்பின் மூலமும், மீண்டும் மியான்மாருக்குள் தள்ளப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த மனுவுக்குப் பதிலளித்த மத்திய அரசாங்கம், “அகதிகளின் உலகத் தலைநகரமாக மாறுவதற்கு, இந்தியா விரும்பவில்லை. ஒவ்வொரு நாட்டிலுள்ளவர்களும், இந்தியாவுக்கு, வௌ்ளம் வருவதைப் போன்று, கூட்டமாக வருகின்றனர்” என்று, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருந்தார். 

“இது குறித்து அரசாங்கப் பேச்சுவார்த்தைகளில் இருக்கின்றது. அரசாங்கம் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். இப்போது இது அவரசமான விடயம் இல்லை. இப்போதைக்கு நீதிமன்றம், இதில் தலையிடுமளவுக்கான விடயமாக இது இல்லை” என்று கூறியிருந்தார். 

இதையடுத்து, இதனுடன் தொடர்படைய வழக்கு, எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

கடும் அடக்குமுறைகளிலிருந்தும் மரணங்களிலிருந்தும் தப்பிக்க இங்கு அகதிகளாக வருபவர்களைத் திருப்பி அனுப்புவது இந்தியாவின் சர்வதேச மனிதார்த்த கடமைகளுக்கு எதிராக உள்ளது என்று கூறிய அகதிகளின் பிரதிநதி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்தியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம், படு இழிவான நிலையில் இருப்பதாகவும் அகதிகள் படு மோசமான வறுமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  

40,000 றோகிஞ்சாக்களை திருப்பி அனுப்புவதற்கு எதிராக செய்யப்பட்ட ஏகப்பட்ட மனுக்களை, நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .