2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘லடாக்கியாவை இஸ்ரேலியத் தாக்குதல்கள் இலக்கு வைத்தன’

Shanmugan Murugavel   / 2021 மே 05 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய தரைக் கடல் துறைமுக நகரான லடாக்கியா மீதான அதிகாலைக்கு முந்தைய தாக்குதல்களில், சில இஸ்ரேலிய ட்ரோன்களை சிரிய வான் கட்டமைப்புகள் வீழ்த்தியதாக, சிரிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

லடாக்கியாவின் தென் மேற்குக் கரையுடனுள்ள சில பகுதிளை, அதிகாலை இரண்டு மணிக்குப் பிந்தைய தாக்குதல்கள் தாக்கியதாக அறிக்கையொன்றில் சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, லடாக்கியாவுக்கு கிழக்காகவுள்ள ஹிஃபா நகரத்தையும், ஹமா மாகாணத்தின் மிஸியஃப்பையும்  இஸ்ரேலியத் தாக்குதல் தாக்கியதாக, சிரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

சிரிய இராணுவம், பாதுகாப்புப் படைகளில் ஆதிக்கம் செலுத்தும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட்டின் சிறுபான்மையின அலவைட் பிரிவுள்ள லடாக்கியா மாகாணத்தின் ஜப்லா நகரத்தின் சில பகுதிகளையே இஸ்ரேலியத் தாக்குதல் இலக்கு வைத்ததாக, சிரிய இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X