2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லெகிமா சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்தது

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெகிமா சூறாவளியானது கரையோரத்தை தொடர்ந்தும் பாதித்து பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக போக்குவரத்தைத் பாதிக்கையில், கிழக்கு சீனாவில், லெகிமா சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 44ஆக இன்று (12) காலையில் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவு தெரிவிக்கின்றது.

16 பேர் காணாமல் போயுள்ள நிலையில் ஸிஜியாங் மாகாணத்திலிருந்து ஏழு பேர், ஷன்டொங்கிலிருந்து ஐந்து பேர் உள்ளடங்கலாக மேலதிகமாக 12 பேர் லெகிமா சூறாவளியால் இறந்ததாக மாகாண அவசர சேவை முகவரகம், சீன அரச ஊடகம் வெளிப்படுத்துகின்றன.

32 பேர் இறந்ததாக சீன அரச தொலைக்காட்சியான சி.சி.டி.வி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

காற்றின் வேகமானது மணிக்கு 187 கிலோ மீற்றர் வரையில் அதிகரித்த நிலையில் ஸிஜியாங் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் லெகிமா சூறாவளியானது தரையிறங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து சூறாவளியின் மையமானது ஷன்டொங், கரையோரமூடாக வடக்கே பயணித்துள்ளது.

இந்நிலையில், மூன்று மணித்தியலத்தில் 160 மில்லிமீற்றர் மழை பெய்ததைத் தொடர்ந்து ஸிஜியாங்கிலுள்ள இயற்கை அணையொன்று தகர்ந்தைத் தொடர்ந்தே ஆரம்பத்தில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.

இதேவேளை, ஸிஜியாங், ஜியாங்சு, நிதியியல் நகரமான ஷங்காயிலிருந்து முன்னர் வெளியேற்றப்பட்ட ஏறத்தாழ 1,000,000 பேருக்கு மேலாக ஷன்டொங் மாகாணத்திலிருந்து 180,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக அம்மாகாண அவசரசேவை முகாமைத்துவக முகவரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 364,000 ஹெக்டேயர்கள் பயிர்கள், 36,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளடங்கலாக 2.5 பில்லியன் ஐக்கிய அமெரிக் டொலர்கள் பொருளாதாரப் பாதிப்பானது லெகிமா சூறாவளியால் ஏற்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .