2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லெஸோதோ பிரதமர் விலகும் அழுத்தங்களுக்கு பணிந்தார்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராஜினாமா செய்யுமாறான அழுத்தத்துக்கு லெஸோதோ பிரதமர் தோமஸ் தபானே நேற்று  அடிபணிந்தார்.

லெஸோதோவை பாதித்த பிரதமர் தோமஸ் தபானேயின் முன்னாள் மனைவியின் கொலையில் பிரதமர் தோமஸ் தபானே, அவரது தற்போதைய மனைவியை பொலிஸ் பெயரிட்ட மூன்று மாதங்களிலேயே பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் அழுத்தங்களுக்கு பிரதமர் தோமஸ் தபானே அடிபணிந்துள்ளார்.

கொலை வழக்கு தொடர்பாக பிரதமர் தோமஸ் தபானேயை இராஜினாமா செய்யுமாறு அவரது அனைத்து பஸோதோ மாநாடு, எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், தென்னாபிரிக்க இடைத்தரகர்கள் என அனைவரும் அழுத்தம் வழங்கியிருந்தனர்.

பிரதமர் தோமஸ் தபானே பதவியேற்பதற்கு இரண்டு நாள்கள் முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி, பிரதமர் தோமஸ் தபானேயின் முன்னாள் மனைவி லிபொலெலோவை துப்பாகிதாரிகள் சுட்டுக் கொன்றிருந்தனர்.

பிரதமர் தோமஸ் தபானே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்தபோதும் உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டப்படாத நிலையில், அவரது இந்நாள் மனைவி மயேசைஹ் உத்தியோகபூர்வமாக கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பதவி விலகுவதற்கு பதிலாக பிரதமர் தோமஸ் தபானேக்கு சட்டவிலக்கு அளிக்கப்படவில்லை என லெஸோதோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தோமஸ் தபானேயின் கூட்டணி கடந்த வாரம் முறிவடைந்ததையடுத்து இராஜினாமா செய்வதைத் தவிர வேறு தெரிவு அவருக்கு இருந்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .