2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வட எல்லைக்கு சிரிய இராணுவத்தை அனுப்ப சிரிய அரசாங்கத்துடன் குர்திஷ்கள் இணக்கம்

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு எதிரான துருக்கியின் வலிந்த தாக்குதலை நிறுத்த முயலும் முகமாக வட எல்லைக்கு சிரிய இராணுவத்தை அனுப்ப சிரிய அரசாங்கம் இணங்கியுள்ளதாக சிரியாவிலுள்ள குர்திஷ்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் சிரிய அரசாங்கப் படைகள் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிரிய அரச ஊடகம் முன்னர் கூறியிருந்தது.

முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட மேலும் சிரியாவுக்குள் துருக்கி ஊடுருவதை அறிந்ததைத் தொடர்ந்து 1,000 வரையான படைகளை வட சிரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் நகர்த்துவதாக ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் அறிவித்ததைத் தொடர்ந்தே மேற்குறித்த நகர்வு இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட துருக்கியத் தாக்குதலானது எல்லைப் பகுதியிலிருந்து குர்திஷ் படைகளை அகற்றுவதை இலக்காகக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரயிறுதியில் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் கடும் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் முக்கிய எல்லை நகரங்கலான றஸ் அல்-ஐன், தல் அப்யட்டில் துருக்கி முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

அந்தவகையில், வட கிழக்கு சிரியாவில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 100க்கும் மேற்பட்ட குர்திஷ் போராளிகளும் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 56 குர்திஷ் படைகள் கொல்லப்பட்டதாக சிரிய ஜனநாயகப் படைகள் தெரிவிக்கின்ற நிலையில், 440 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி கூறியுள்ளது.

இதேவேளை, துருக்கி தகவல்களின் அடிப்படையில் தென் துருக்கியில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதவிர, நான்கு துருக்கிப் படைவீரர்களும், 16 துருக்கிக்கு ஆதரவான சிரியப் போராளிகளும் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .