2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘வட, தென் கொரியாக்கள் துப்பாக்கி பிரயோக பரிமாற்றம்’

Editorial   / 2020 மே 03 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரியத் தீபகற்பத்தை பிரிக்கும் சூனிய வலயத்தில் தென்கொரியாவை நோக்கி வடகொரியப் படைகள் பல தடவைகள் துப்பாக்கியால் இன்று சுட்டதாகவும் அதையடுத்து தென்கொரியப் படைகள் திருப்பிச் சுட்டதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவிலிருந்தான சில சூடுகளின் மூலம் தென்கொரிய காவல் நிலையொன்று தாக்கப்பட்டதாக அறிக்கையொன்றில் தெரிவித்த தென்கொரியாவிலுள்ள பணியாட்தொகுதி அலுவலகம், தென்கொரியாவில் எப்பாதிப்புகளும் இல்லை எனக் கூறியுள்ளது.

இரண்டு சுற்று துப்பாக்கிச் சூடுகள், எச்சரிக்கை அறிவிப்பொன்று மூலம் தமது இராணுவம் பதிலளித்தாக பணியாட்தொகுதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் துப்பாக்கிச்சூடுகள் வேண்டுமென்றவை எனக் கருதப்படவில்லை என தென்கொரிய இராணுவம் பின்னர் தெரிவித்ததாக யொன்ஹப் செய்தி முகவரகம் குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவும், தென்கொரியாவும் இறுதியாக 2014ஆம் ஆண்டே துப்பாக்கிப் பிரயோகத்தை பரிமாறியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .