2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடகிழக்கு கொ.ஜ. குடியரசிலுள்ள மீன் சந்தையில் 19 பேரைக் கொன்றனர் துப்பாக்கிதாரிகள்

Editorial   / 2019 மே 21 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், அல்பேரில் ஏரிக்கருகிலுள்ள மீன் சந்தையொன்றை துப்பாக்கிதாரிகள் தாக்கியதில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு எக்குழுவும் உரிமை கோராதபோதும், இடுரி மாகாணத்தைச் சூழவுள்ள பிராந்தியமானது ஹெமா, லென்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதத்குழுக்களுக்கிடையிலான சமூகங்களுக்கிடையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தது.

அல்பேர் ஏரியின் முனையிலுள்ள தாரா கிராமத்தில் 19 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எட்டுப் பேர் காயமடைந்ததாக, டிஜுகு பிராந்தியத்திலுள்ள உள்ளூர் சமூகத் தலைவரொருவரான பிலோ முலின்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தையொன்றை ஏற்படுத்த நதிக் கரையில் கூடிய குழுவொன்றையே ஆயுதந்தரித்தவர்கள் கடந்த புதன்கிழமை தாக்கியபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பிலோ முலின்டோ மேலும் கூறியுள்ளார்.

இதுதவிர, மீனவர்களும், அவர்களது வாடிக்கையாளர்களுமே கொல்லப்பட்டதாக பிலோ முலின்டோ தெரிவித்துள்ளார். குறித்த பிராந்தியமானது, லென்டு ஆயுதக்குழு இயங்குநிலையிலுள்ள பகுதியாக அறியப்படுகிறது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகளின் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நிலைப்படுத்தும் நடவடிக்கை நிறுவனமானது குறிப்பிட்ட இறந்தோர் எண்ணிக்கை இல்லாமல் தெரிவித்தநிலையில், குறித்த பகுதிக்கு அணியொன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஹெமா மேய்ச்சல்காரர் சமூக ஆயுதக் குழுக்களும், லென்டு விவசாயிகளும் கடந்தாண்டு மோதிக்கொண்டபோது இடுரி மாகாணத்தில் வன்முறை வெடித்ததுடன், குறிப்பாக டிஜுகுவில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .