2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடகொரியத் தடைகளில் மாற்றமில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரிய போர்க்கப்பலை 2010ஆம் ஆண்டு மூழ்கடித்தது தொடர்பில் வடகொரியாவுக்கெதிராக விதிக்கப்பட்ட தடைகளை விலக்குவது குறித்து தென்கொரியா ஒருபோதும் கருத்திற் கொள்ளவில்லை என வடகொரியா, தெனகொரியா இணைப்புக்கான அமைச்சர் சோ மையுங்-கயூன் நேற்று தெரிவித்துள்ளார்.

போர்க்கப்பல் மீதான டொர்பிடோ தாக்குதலில், தென்கொரிய கடற்சிப்பந்திகள் 46 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கெதிராக விதிக்கப்பட்ட தடைகள் மீளாய்வின் கீழுள்ளதாக தென்கொரியாவின் வெளிநாட்டமைச்சர் கங் கயுங்-வாஹ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையிலேயே மேற்குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

குறித்த கருத்தைத் தொடர்ந்து, தென்கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அக்கருத்து மீளப் பெறப்பட்டதோடு, தடைகளை நீக்குவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் அனுமதியை தென்கொரியா பெற வேண்டுமென ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

வடகொரியா அணுவாயுதமழிப்பை மேற்கொள்ளும் வரைக்கும் தடைகள் நடைமுறையில் இருக்கும் என ட்ரம் கூறியுள்ளார்.

குறித்த போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டத்தில் எதுவித வகிபாகத்தையும் கொண்டிருக்கவில்லையென வடகொரியா மறுக்கின்ற நிலையில், குறித்த தடைகளானது, அனைத்து வடகொரியக் கப்பல்களும் தென்கொரிய துறைமுகங்களுக்குள் வருவது தடைசெய்வதுடன், சுற்றுலா, வர்த்தக, உதவி உள்ளடங்கலாக வடகொரியா, தென்கொரியாவிடையேயான பரிமாற்றத்தை தடை செய்கிறது.

எவ்வாறாயினும், ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள் பலத்த விமர்சனத்தை தென்கொரியாவில் ஏற்படுத்தியுள்ளதுடன், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்ப்பின் கருத்தை அவமானம் என விளித்துள்ளனர்.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை கடந்த மாதம் மூன்றாவது தடவையாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜயே-இன் சந்தித்தபோது பொருளாதார ஒத்துழைப்பை மீள ஆரம்பிக்க இருவரும் இணங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .