2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடகொரியர்களைச் சந்திக்க இரகசியத் திட்டம்

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் இடம்பெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுக்குச் சென்றிருந்த, ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸுக்கும், அங்கு சென்றிருந்த வடகொரியத் தூதுக்குழுவுக்கும் இடையில், இரகசியமான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும், இறுதிநேரத்தில் அது கைகூடாமல் போனது எனவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில், வடகொரியத் தலைவரின் தங்கை கிம் யோ ஜொங், வடகொரியாவின் சம்பிரதாயபூர்வமான தலைவர் கிம் யொங் நம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இரு தரப்பினரும், ஒரே பிரிவிலேயே அமர்ந்திருந்த போதிலும், கைலாகு கொடுக்கவோ அல்லது உரையாடியிருக்கவோ இல்லை. ஆனாலும் கூட, இரு தரப்பினரும் இரகசியமாகச் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அச்சந்திப்புக்கு முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்த உப ஜனாதிபதி மைக் பென்ஸ், வடகொரிய அரசாங்கத்தை “கொலைகார அரசாங்கம்” என்று அழைத்ததோடு, இதுவரை இல்லாத அளவுக்கு, அந்நாடு மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பென்ஸுடனான சந்திப்பிலிருந்து, வடகொரியர்கள் விலகிக் கொண்டனர் என அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X