2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடகொரியா செல்கிறார் சீன அமைச்சர்

Editorial   / 2018 மே 01 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரிய வெளிநாட்டு அமைச்சர் வாங் யி, வடகொரியாவுக்கான விஜயமொன்றை, நாளை (02) மேற்கொள்ளவுள்ளார். இதன்மூலம், கடந்த சில ஆண்டுகளில், வடகொரியாவின் உயர்நிலை அதிகாரியொருவர், வடகொரியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான சரித்திரபூர்வமான சந்திப்பு நடைபெற்று, இரு நாடுகளுக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, சீன வெளிநாட்டு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது.

வடகொரிய வெளிநாட்டு அமைச்சரின் அழைப்பின் பேரில் இடம்பெறவுள்ள இவ்விஜயம், இரண்டு நாட்களுக்கு நீடிக்கவுள்ளது.

2007ஆம் ஆண்டின் பின்னர், சீன வெளிநாட்டு அமைச்சரொருவர், வடகொரியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது. வடகொரியாவின் அண்மைய அணுவாயுதச் சோதனைகள் காரணமாக, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில், பாதிப்புகள் ஏற்பட்டன எனக் கருதப்பட்ட நிலையிலேயே, இவ்விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இணக்க நிலையின் அடுத்த கட்டமாக, வடகொரியாவின் எல்லைக் காவலில் ஈடுபட்டிருக்கும் வடகொரிய இராணுவத்தினருக்கு, பிரசாரங்களை மேற்கொள்ளும் ஒலிபெருக்கித் தொகுதிகளை அகற்றுவதாக, தென்கொரியா அறிவித்துள்ளது. இந்த ஒலிபெருக்கிகளை நிறுத்துவதாக அண்மையில் (23) தென்கொரியா அறிவித்திருந்த நிலையில், தற்போது அவற்றை அகற்றுவதாக, தென்கொரியா அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .