2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடகொரியா நோக்கிய ஒலிபெருக்கிகளை நிறுத்தியது தென்கொரியா

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் எல்லைக் காவலில் ஈடுபட்டிருக்கும் வடகொரிய இராணுவத்தினருக்கு, பிரசாரங்களை மேற்கொள்ளும் ஒலிபெருக்கித் தொகுதிகளை, தென்கொரியா நேற்று (23) நிறுத்தியது. இரு நாட்டுத் தலைவர்களும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தையதான நல்லெண்ண நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரியத் தீபகற்ப நாடுகள் இரண்டுக்கும் இடையிலான முரண்பாடுகளை, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், இப்பேச்சுவார்த்தைகள் காரணமாக, முக்கியமான திருப்பு முனைகள் பெறப்படுமா என்பது, இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.

ஆனால், தென்கொரிய ஜனாதிபதியுடன் சில நாட்களிலும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியுடன் சில வாரங்களிலும், வடகொரியத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, தமது அணுவாயுத, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் சோதனைகளை, இனிமேல் மேற்கொள்வதில்லை என்ற உறுதிமொழியை, வடகொரியா வழங்கியிருக்கிறது.

இந்நிலையிலேயே, தனது பிரசார ஒலிபெருக்கிகளை நிறுத்தும் முடிவை, தென்கொரியா எடுத்துள்ளது. பாரிய ஒலிபெருக்கிகள், தொகுதிகளாக வைக்கப்பட்டு, செய்திகள், இசை, வடகொரிய இராணுவத்தினர் பிரிவதற்கான ஊக்குவிப்புக் கருத்துகள் ஆகியன, தென்கொரியாவால் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இது, வடகொரியாவைக் கோபப்படுத்தியதோடு, அதற்கெதிரான எச்சரிக்கைகளையும் வழங்குவதற்கு வழிவகுத்தது.

இந்நிலையில் அறிக்கையொன்றை நேற்று வெளியிட்ட தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு, “கொரியாக்களு

க்கிடையிலான 2018ஆம் ஆண்டின் சந்திப்புக்கு முன்னர், இராணுவப் பதற்றத்தைக் குறைக்கவும், சமாதானமான சூழலை ஏற்படுத்துவதற்குமாக, ஒலிபெருக்கி மூலமான ஒலிபெருக்கிகளை நிறுத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டது.

இதேவேளை, அணுவாயுதச் சோதனை உட்பட, முக்கியமான சோதனைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு வடகொரியா எடுத்த முடிவை வரவேற்பதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், நேற்றுக் குறிப்பிட்டார். இது, முக்கியமானதொரு விடயமென, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .