2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘வடகொரியாவுடன் முரண்பாடு வரலாம்’

Editorial   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறான கணிப்புக் காரணமாக, வடகொரியாவுடன் முரண்பாடு ஏற்படும் அச்சம் காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் உயர்நிலை அதிகாரியொருவர், தொடர்பாடல் வசதிகளைத் திறந்த வகையில் வைத்திருக்குமாறு வடகொரியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட நாடான வடகொரியாவுக்கு, 2010ஆம் ஆண்டின் பின்னர், ஐ.நா உயரதிகாரியொருவர் சென்ற சந்தர்ப்பமாக, அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் கீழ் செயலாளர் நாயகமான ஜெப்ரி ஃபெல்ட்மானின் விஜயம் அமைந்திருந்தது.

இந்நிலையில், தனது விஜயத்தை நேற்று முன்தினம் (09) முடித்துக் கொண்ட அவர், அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது விஜயத்தின் போது, வடகொரிய வெளிநாட்மமைச்சர் றி யொங்-ஹோ, உப வெளிநாட்டமைச்சர் பாக் மையொங்-குக் ஆகியோரைச் சந்தித்த ஃபெல்ட்மான், தற்போதுள்ள நிலைமையை, மிகவும் பதற்றகரமானதும் சமாதானத்துக்கு ஆபத்தானதும் உலகிலுள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விடயமாகவும் உள்ளதென, அவர்களுடன் ஏற்றுக் கொண்டார் என, ஐ.நா வெளியிட்ட அறிவிப்புத் தெரிவித்தது.

அத்தோடு, ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், ஃபெல்ட்மான் வலியுறுத்தினார் எனவும், அவ்வறிக்கை தெரிவித்தது.

இவ்விஜயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட வடகொரிய அரச ஊடகம், வடகொரியா தொடர்பில் ஐ.அமெரிக்காவின் “ஆத்திரமூட்டும் கொள்கைகள்” காரணமாகவே, கொரியத் தீபகற்பத்தில் தற்போதுள்ள பதற்றமான நிலைமை காணப்படுகிறது எனத் தெரிவித்தது. எனினும், “பல்வேறு மட்டங்களிலான விஜயங்கள் மூலமாக, தொடர்பாடலை ஒழுங்குபடுத்துவதற்கு, ஐ.நாவுடன் ஒப்புக் கொண்டோம்” என்றும், அவ்வறிக்கை தெரிவித்தது.

இவ்விஜயத்தின் போது அவர், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னைச் சந்தித்தாரா என்பது தொடர்பில், உறுதியான தகவல்கள் எவையும் வெளியிடப்பட்டிருக்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .