2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வன்முறைகள் வெடித்ததில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீயாவின் நான்கு மாநிலங்களில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகளும், உள்ளூர் தகவல் மூலங்களும் நேற்று முன்தினம் தெரிவித்துள்ள நிலையில், இவ்வாரம் ஆங்காங்கே இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயர்ந்தந்து.

வடகிழக்கு நைஜீரியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலமையுடன் வன்முறை இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு போகோ ஹராம் ஆயுததாரிகளுக்கெதிரான அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கையொன்றுக்கு முன்பதாக 2,000 பேர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

தென்கிழக்கு நைஜீரிய மாநிலமான றிவர்ஸின் ஒகொனி பிராந்தியத்தில், எமோஹுவா கிராமத்தை ஆயுதந்தரித்த நபர்கள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தாக்கியதில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தலைவர் சணி ஒடும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட நைஜீரிய மாநிலமான கட்சினாவின் கங்கரா பிராந்தியத்திலுள்ள சமியார் ஜினோவில், மந்தைத் திருடர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கத்தால் ஆயுதமளிக்கப்பட்ட சிவிலியன் ஆயுதக்குழுவுக்குமிடையே இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருடர்களால் 36 பேர் கொல்லப்பட்டதாக கிராமத் தலைவர் ஜாஃபரு பெல்லோ தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X