2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வன்முறையால் 20 பேர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைஜீரியாவின் மத்திய மாநிலமான பிளாட்டியோவில், புதிதாக ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக, குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, “இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்” என, அந்நாட்டுப் பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும், ஜனாதிபதி முகஹமட் புஹாரி கோரியுள்ளார். 

மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக எழுந்த கருத்து முரண்பாடுகளைத் தொடர்ந்து, ஃபுலானி என்ற இடையர் குழுவினர், துப்பாக்கிகளையும் குண்டுகளையும் பயன்படுத்தி, குறைந்தது 20 பேரைக் கொன்றனர் என்று சந்தேகிக்கப்படுகிறது. நைஜீரியாவின் மத்திய பகுதியில், இப்பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், அதன் ஓர் அங்கமாகவே இது இடம்பெற்றது. 

இதைத் தொடர்ந்து, இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி அலுவலகம், “பிளாட்டியோ மாநிலத்தில், குறைந்தது 20 பேர் அண்மையில் கொல்லப்பட்டனர் என்ற கவலையானதும் துயரமானதுமான செய்தியை, ஜனாதிபதி முஹம்மட் புஹாரி பெற்றுக் கொண்டுள்ளார். இந்தத் தாக்குதல், இடையர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் என வர்ணிக்கப்படுகிறது. 

“இந்தப் பைத்தியக்காரத்தனம், அதிக தூரம் சென்றுவிட்டது. வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பதோடு, உடனடியாக எந்தவிதமான தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் இடம்பெறக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறும் பணித்துள்ளார்” என்று தெரிவித்தது. 

ஃபுலானி இடையர் குழு, முஸ்லிம் குழுவாகும். மறுபக்கமாக, மேய்ச்சல் தரைகளை உரிமைப்படுத்தியுள்ளோர், கிறிஸ்தவர்களாவர். இரு தரப்பினருக்குமிடையில், அண்மைக்காலமாகவே பதற்றம் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதையும் மீறி, ஃபுலானி குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .