2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெள்ளை மாளிகையில் பொதுமன்னிப்புக்காக இலஞ்சத் திட்டம்?

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு ஒன்றுக்கு பதிலாக வெள்ளை மாளிகைக்கு பணம் அனுப்பப்பட்ட குற்றத்துக்கான சாத்தியம் ஒன்று குறித்து அந்நாட்டு நீதித் திணைக்களம் விசாரிப்பதாக மத்திய நீதிமன்றம் ஒன்றில் வெளிப்படுத்தப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பொதுமன்னிப்புக்கான இலஞ்சமொன்று என ஐ. அமெரிக்க மாவட்ட நீதிபதி பெரைல் ஹொவெல் நேற்று தெரிவித்த அதிகம் நீக்கப்பட்ட உத்தரவொன்றை வெளியிட்டிருந்தார்.

18 பக்க ஆவணத்தில் ஏறத்தாழ அரைவாசி கறுப்பாக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கான பதிப்பில் குறித்த திட்டம் குறித்து சில தகவல்களே வழங்கப்பட்டிருந்ததுடன், இதில் பங்கெடுத்திருக்கக்கூடிய சாத்தியமான எவரும் பெயரிடப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், எந்தவொரு அரசாங்க அதிகாரியும் விசாரணையில் இலக்கு வைக்கப்படவில்லை என நீதித் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளின்னுக்கு கடந்த வாரம் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு குறித்த விசாரணையில் மத்திய விசாரணை பணியகத்துக்கு பொய்யுரைத்தத குற்றத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .