2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விமானத் தாக்குதல் திட்டத்தை இஸ்‌ரேல் தடுத்தது

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானமொன்றை வெடிக்க வைக்கும் திட்டமொன்றைத் தகர்ப்பதற்கு, அவுஸ்திரேலியாவுக்கு, இஸ்‌ரேல் உதவியது என, இரு நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன. கடந்தாண்டு, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிட்னியிலிருந்து அபு தாபி நோக்கிப் பயணிக்கவிருந்த விமானத்தை, குண்டுவைத்துத் தகர்க்க முயன்ற குற்றச்சாட்டில், சகோதரர்கள் இருவர்கள் மீது, கடந்தாண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அச்சம்பவத்தையே, இஸ்‌ரேல் தடுத்தது எனக் கூறப்படுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய சம்பவம் என, அவுஸ்திரேலியா இதைத் தெரிவித்தது.

குண்டுவெடிக்கும் திட்டத்தை அவர்கள் கொண்டிருந்தாலும், கடைசி நேரத்தில் அதைக் கைவிட்டனர் என்றும். பின்னர், ஐதரசன் சல்பைட் வாயுவை, விமானத்துக்குள் வெளியிடும் கருவியொன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தனர் எனவும், அப்போதே கைதாகினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X