2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீட்டுக்காவலில் ஜோர்தான் முன்னாள் முடிக்குரிய இளவரசர்?

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விமர்சகர்கள் மீதான நடவடிக்கை ஒன்றின் அங்கம் ஒன்றாகத் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஜோர்தானின் முன்னாள் முடிக்குரிய இளவரசரான, இளவரசர் ஹம்ஸா பின் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

ஹுஸைனின் வழக்கறிஞரால் பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு (பி.பி.சி) வழங்கப்பட்ட காணொளியில், ஜோர்தானின் தலைவர்களை மோசடி, அச்சுறுத்தல் குறித்து, ஜோர்தான் மன்னர் அப்துல்லாவின் அரைச் சகோதரரான ஹுஸைன் குற்றஞ்சாட்டுகின்றார்.

மன்னர் அப்துல்லாவுக்கும், ஹுஸைனுக்கும் தந்தை ஒருவர் என்பதோடு தாய்மார் வெவ்வேறானவர்கள்.

ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டமொன்று கூறப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உயர் மட்டக் கைதுகளையடுத்தே குறித்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

எவ்வாறெனினும், ஹுஸைன் வீட்டுக் காவலில் இருப்பதை இராணுவம் மறுத்துள்ளது.

எனினும், ஜோர்தானின் பாதுகாப்பையும், நிலையையும் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஹுஸைனுக்கு கூறப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தான் எவ்வித சதித் திட்டத்திலும் பங்கெடுக்கவில்லை என ஹுஸைன் மறுத்துள்ளார்.

தனது அனைத்துப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தானும், தனது குடும்படும், ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு வெளியேயுள்ள அல்-சலாம் மாளிகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார்.

ஹுஸைனே முதலில் மன்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இளையவரெனத் தெரிவித்து, ஹுஸைனின் தந்தை இறந்தபோது அப்துல்லா மன்னராக, ஹுஸைன் முடிக்குரிய இளவரசாகியிருந்தார். பின்னர், 2004ஆம் ஆண்டு ஹுஸைனை முடிக்குரிய இளவரசர் பட்டத்திலிருந்து அப்துல்லா நீக்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .