2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மிர் தலைவர்கள் விடுதலை

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு காஷ்மிரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட காஷ்மிர் எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மிருக்கான 370ஆவது சட்டப்பிரிவை இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி இந்திய அரசாங்கம் நீக்கியது. இதனையடுத்து காஷ்மிர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அரசியல் மற்றும் பிரிவினைவாத இயக்க த்தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஏறக்குறைய 2 மாதங்களாக வீட்டுக்காவலில் அவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மிரில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அவர்களின் வீட்டுக்காவல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க வட்டார தகவல்கள் கூறுகையில், காஷ்மில் தற்போது வரை அமைதியான சூழல் நிலவுவதாலும், காஷ்மிர் தேர்தல் ஆணைக்குழு உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ளதாலும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  மாலை பொலிஸார் தங்களை வீட்டுக்காவலில் இருந்து விடுவித்ததாக செய்தியாளர்களை சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மிரின் முன்னாள் முதலமைச்சர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட சுமார் 400 அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பொது பாதுகாப்பு கருதியே இந்த வீட்டுக்காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .