2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெனிசுவேலா எதிரணி சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை நீக்கம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை கலந்துகொண்ட பேரணியில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு காரணமானவர்களெனக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர்களான ஜுலியோ பொர்கஸ், ஜுவான் றெசன்ஸை விசாரணை செய்யும் பொருட்டு இவர்களின் சிறப்புரிமையை வெனிசுவேலாவின் அரசமைப்புச் சபை நேற்று நீக்கியுள்ளது.

இதில், ஜுவான் றெசன்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான ஜுலியோ பொர்கஸ் வெளிநாட்டிலேயே இருக்கின்ற நிலையில், வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான உத்தரவை நேற்று  வழங்கியிருந்தது.

இந்நிலையில், தமது உறுப்பினர்களின் சிறப்பரிமையை நீக்கும் எந்த முயற்சியும் அரசமைப்புக்கு முரணான்பதென தேசிய சட்டமன்றம் நிராகரித்துள்ளது. எவ்வாறெனினும் தேசிய சட்டமன்றத்தின் தீர்மானங்கள் உச்ச நீதிமன்றத்தால் இல்லாமற் செய்யப்படுவது வழமையாகும்.

இதேவேளை, தன்னை ஆட்சியிலிருந்து அகற்ற வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டதாகக் தான் கூறும் ஜுலியோ போர்கஸ் உள்ளிட்ட எதிரணியினரை நாடுகடத்துமாறு ஐக்கிய அமெரிக்காவுக்கும் கொலம்பியாவுக்கும் ஜனாதிபதி மதுரோ அழுத்தம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி இவான் டுக்கே, ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நிகழ்வில் நேற்று முன்தினம் பங்கேற்றிருந்த ஜுலியா பொர்கஸ், தனக்கெதிராக மதுரோ முன்வைத்த குற்றச்சாட்டு பொய் எனக் கூறியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X