2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெனிசுவேலா சிறைக்கலகத்தில் 47 பேர் இறந்தனர்

Editorial   / 2020 மே 03 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கு வெனிசுவேலாவில் சிறைச்சாலைக் கலவரமொன்றில் குறைந்தது 47 பேர் இறந்துள்ளதுட்டன், 75 பேர் காயமடைந்துள்ளனர்.

குவானரே நகரத்திலுள்ள லொஸ் லானோஸ் சிறைச்சாலை நிலையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற கலவரத்தின் தரவுகளையே மனித உரிமைகள் குழுவான வெனிசுவேலா சிறைச்சாலை கண்காணிப்பகம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், சிறைச்சாலையுள்ள போர்த்துக்கேசா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சபாநாயகர் மரியா பீட்றிஸ் மார்ட்டின்ஸ், தற்போது 47 இறப்புகளையும், 75 காயமடைந்தோரையும் உறுதிப்படுத்தக்கூடியதாகவுள்ளது எனக் கூறியுள்ளார்.

இறந்தவர்கள் அனைத்தும் கைதிகள் என பீட்றிஸ் மார்ட்டின்ஸும், வெனிசுவேலா சிறைச்சாலைக் கண்காணிப்பகமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,நேற்று முன்தின இராணுவ அறிக்கையொன்றின்படி, முன்னரங்கிலுள்ள பாதுகாப்புவேலிகளை பாரிய தப்பிப்பு முயற்சியொன்றில் சிறைக்கைதிகள் அழிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து கலகம் ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைப் பணிப்பாளரும் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், மேற்குறித்த விடயத்தை மறுத்துள்ள பீட்றிஸ் மார்ட்டின்ஸ், உணவில்லை எனத் தெரிவித்தே சிறைக்கைதிகள் குழுவொன்றால் கலகம் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், வெனிசுவேலா சிறைச்சாலைக் கண்காணிப்பகத்தின்படி 2,500 பேரைக் கொண்டுள்ள 750 கைதிகளுக்கான கொள்ளளவைக் கொண்டுள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .