2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு ஊடகங்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் சீனா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ஸியான்ஜியாங்கில், மனித உரிமை மீறல்களை வெளியிட்டதற்காக, பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உலகச் செய்திகளை ஒளிபரப்ப சீனா தடைவிதித்தமையானது, தமது அரசாங்கம் மீதான சுயாதீன செய்தியிடலைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான சீனாவின் அதிகரித்து வரும் தாக்குதல்களை வெளிப்படுத்துகிறது.

வெளிநாட்டு ஊடகவியாளர்களைக் குற்றஞ்சாட்டும் காணொளிகள், புகைப்படங்கள், கட்டுரைகளை சீனா வெளியிட்டுள்ளதாகவும், வெளிநாட்டு புலனாய்வுச் சேவைகளின் மறைமுகங்களே ஊடக நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுவதாகவும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்ஹுர் முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸியாங்ஜியாங்க்கில் ஒடுக்கலை தயார்படுத்துவதாகவும், சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்காக எர்ய்க் பக்‌ஷோ எழுதியுள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற தியனமென் சதுக்க பேரழிவுக்குப் பின்னர் கடந்தாண்டே பாரியளவில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டதாக, சீனாவின் வெளிநாட்டு ஊடகவியாலாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.

குறைந்தது 18 ஊடகவியலாளர்கள் வெளியேற வேண்டி ஏற்பட்டதுடன், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அவர்களின் வீசாக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .