2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெளியேற ஆரம்பித்துள்ள ஐ. அமெரிக்க, நேட்டோ படைகள்

Shanmugan Murugavel   / 2021 மே 02 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை உத்தியோகபூர்வமாக வாபஸ் பெறுவதை ஐக்கிய அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், “எப்போதும் போர்” என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததன் முடிவின் ஆரம்பம் இதுவாகும்.

ஐக்கிய அமெரிக்காவும், வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பும் (நேட்டோ) ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பிரசன்னமாகியிருக்கின்றன.

இந்நிலையில், இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கவுள்ள வாபஸ் பெறுதலானது, அதிகரித்து வரும்  வன்முறைகளுக்கு மத்தியிலேயே இடம்பெறுவதுடன், பதில் தாக்குதல்கள் குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கையிலுள்ளன.

இதேவேளை, சர்வதேசப் படைகளை இலக்கு வைக்க மாட்டோமென்ற ஒப்பந்தத்தின் படி இனி ஒழுக மாட்டோம் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், தலிபான்களுக்குமிடையே கடந்தாண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ், நேற்று முன்தினத்துக்கு முன்னர் வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .