2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ளை மாளிகைக்கு அருகில் தீ எரிகிறது

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இனம், பொலிஸ் தொடர்பான ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த ஐக்கிய அமெரிக்கா தடுமாறுகின்ற நிலையில், வெள்ளை மாளிகைக்கருகே தீ எரிந்ததுடன், நியூ யோர்க் நகரம் மற்றும் தென் கலிபோர்னியாவில் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன், மினியாபொலிஸில் பேரணியாகச் சென்றவர்களூடு எண்ணெய்த் தாங்கி ட்ரக்கொன்று ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆறாவது நாள் இரவாக நேற்று தொடரும் வன்முறையை முறியடிப்பதற்கான முயற்சியாக, 15 மாநிலங்கள், ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனில் தேசிய காவலர் படைகள் தரையிறக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் காவலில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட் இறந்தது தொடர்பில் அமைதியான ஆர்ப்பாட்டங்களினூடே கலகம் ஆரம்பித்திருந்தது.

ஜோர்ஜ் புளொய்ட்டின் கழுத்தை வெள்ளையின மினியாபொலிஸ் பொலிஸ் அதிகாரியொருவர் அவர் கடந்த மாதம் 25ஆம் திகதி இறப்பதற்கு முன்பாக ஏறத்தாழ ஒன்பது நிமிடங்களாக உதையும் காணொளி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மார்ட்டின் லூதர் கிங் 1968ஆம் ஆண்டு கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து அதிகளவில் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் டசின் கணக்கான நகரங்களில் ஊரடங்குகளை அதிகாரிகள் அமல்படுத்தியிருந்தனர்.

கென்டக்கி லெளஸ்வில்லேயில்இன்று அதிகாலை பொலிஸாரால் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சி.பி.எஸ்ஸின் உள்ளூர்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீ மூட்டியிருந்தனர்.

இதேவேளை, மினியாபொலிஸ் ஐ-35 நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டக்காரர்களினூடு எண்ணெய்த் தாங்கி ட்ரக்கொன்று நேற்று பிற்பகல் ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்ரக்கிலிருந்து இழுக்கப்பட்ட ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடிக்கப்பட்ட பின்னர் அவரைத் தடுப்புக்காவலில் பொலிஸார் எடுத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .