2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வேறு நாடுகளின் சான்று தேவையில்லை’

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டின் மதச்சார்பின்மை குறித்து, வேறு நாடுகள் சான்று வழங்க வேண்டிய அவசியமில்லையென இந்திய மத்திய அரசாங்கம் திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள நிலையில், இந்த அறிக்கைக்கு, பா.ஜ.க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மக்களின் வளர்ச்சிக்காக செயற்படும் பிரதமர் நரேந்திர மோடி மீது வீண்பழி சுமத்தும் வகையில், ஒருதலைபட்சமான அறிக்கையை, அமெரிக்கா வெளியிட்டிருப்பதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்​துறை வழங்கியுள்ள பதிலில், மதச்சார்பின்மை மற்றும் அதன் கூறுகளையும் அரசாங்கம் சிறப்பாகவே பாதுகாத்து வருவதாகவும் சிறுபான்மை சமூகத்தவர் உட்பட நாட்டிலுள்ள அனைத்து குடிமகன்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.

ஆகையால் இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்து ஏனைய நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .