2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வேலூர் தேர்தல் இரத்து

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலூர் மக்களவைத் தொகுதியில், அதிகளவில் பணம் கைப்பற்றதையடுத்து, தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதிக்கான தேர்தலை இரத்துச் செய்துள்ளது.

பணம் கைப்பற்றலைத் தொடர்ந்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையகம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இரத்துச் செய்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனையின் போது, ரொக்கப் பணம் சிக்கியமை, அவருடைய நெருங்கிய உறவினரின் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டமையை அடுத்து, அவர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே, இந்தத் தேர்தலை இரத்து செய்வது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X