2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’வைகோவுக்கு இப்போதைக்கு தண்டனையில்லை’

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்துரோக வழக்கில், வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக தேசத்​துரோக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்ட பின்னர், அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், தீர்ப்பை எதிர்த்து, வைகோ மேல்முறையீடு செய்திருந்ததையடுத்து, குறித்த மனு, இன்று (18), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, வைகோவுக்கு, சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.

வைகோ தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X