2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹூதிகளால் நூற்றுக்கணக்கான கைதிகளின் விடுவிப்பு அறிவிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியர்கள் மூவர் உட்பட 350 கைதிகளின் நிபந்தனையில்லாத விடுதலையை ஹூதிப் போராளிகள் அறிவித்துள்ளதாக ஹூதிகளால் நடாத்தப்படும் அல் மஸிராஹ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சுவீடனின் ஸ்டொக்ஹொம்மில் கடந்தாண்டு டிசெம்பரில் இணங்கப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அங்கமாக விடுவிக்கப்பட்ட மேற்குறித்த நபர்கள் இருந்ததாக அல் மஸிராஹ் தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்ட கைதிகள் விவகாரங்களுக்கான ஹூதி தேசிய சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் ஏற்படுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி ஹூதிகளின் தரப்பிலும், யேமனிய அரசாங்கத்தின் தரப்பிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 7,000 பேர் பங்கேற்பார்கள் என்ற நிலையில், இதை நடைமுறைப்படுத்துவதுதில் ஹூதிகளும், யேமனிய அரசாங்கமும் தடுமாறிய நிலையில் குறித்த ஒப்பந்தமானது தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், தங்களது முன்னெடுப்பானது சுவீடன் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தங்களின் உண்மையை வெளிப்படுத்துவதாக அல்-மஸிராஹ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது கைதிகளுக்கான விவகாரங்களுக்கான ஹூதி தேசிய சபையின் தலைவர் அப்துல் காதர் அல்-முர்டாடா, அடுத்த பகுதியையும் சமமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாங்கள் அழைப்பதாகக் கூறியுள்ளார்.

சுவீடன் ஒப்பந்தத்தின் எதுவும் அடையப்படாததால் 350 கைதிகளை விடுவிக்க தாங்கள் தீர்மானித்துள்ளதாகவும், விடுவிப்பு நேற்று இடம்பெறுமெனவும் கைதிகளுக்கான விவகாரங்களுக்கான ஹூதி தேசிய சபையின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுவிப்பை மேற்கொள்வதற்கு உதவுகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சபை 290 பேர் விடுவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

யேமனியத் தலைநகர் சனாவையும், பெரும்பாலான வட பகுதியையும் 2014ஆம் ஆண்டு கைப்பற்றியது முதலான ஹூதிகளின் நடவடிக்கைகளிலிருந்து குறித்த கைதிகள் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .