2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹொங் கொங்குக்கு ஐ. அமெரிக்க இராணுவ கப்பல்கள், விமானங்கள் செல்வதற்கு சீனா தடை

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங்கொங்குக்கு ஐக்கிய அமெரிக்க இராணுவ கப்பல்கள், விமாங்கள் செல்வதற்கு நேற்று  தடை விதித்துள்ள சீனா, ஹொங் கொங்கில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவித்தன என்று கூறப்படுவது தொடரில் சில ஐக்கிய அமெரிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.

அந்தவகையில், ஹொங் கொங்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய அமெரிக்க சட்டமூலத்துக்கான பதிலடியான நடவடிக்கைகளாக மேற்குறித்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

காலவரையற்ற வகையில் ஐக்கிய அமெரிக்க இராணுவ விஜயங்களுக்கான கோரிக்கைகளை உள்ளெடுப்பதை இடைநிறுத்துவதாகத் தெரிவித்துள்ள சீனா, மேலும் நடவடிக்கைகள் வரும் என எச்சரித்துள்ளது.

தவறுகளைத் திருத்திக் கொள்ள ஐக்கிய அமெரிக்காவை வலியுறுத்துவதாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ள சீன வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், தங்களது உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு வலியுறுத்துள்ளார்.

ஹொங் கொங்கிலுள்ள அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் ஹொங் கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டத்தில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கைச்சாத்திட்ட பின்னர் தாம் உறுதியான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், ஹொங் கொங் பிரச்சினை காரணமாக ஐக்கிய அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான வர்த்தப் போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தமொன்றை அடைவதற்கான ஐக்கிய அமெரிக்க, சீனாவின் முயற்சிகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X