2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹொடெய்டாவிலிலிருந்து வெளியேறும் திட்டங்களுக்கு இணக்கம்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல காலம் தாமதமான, யேமனின் ஹொடெய்டாவிலிருந்து வெளியேறுவதற்கான விரிவான திட்டமொன்றை யேமனிய அரசாங்கமும், ஹூதி போராளிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸின் யேமனுக்கான சிறப்புத் தூதுவர் மார்ட்டின் கிறிஃபித்ஸ் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், எப்போது ஹொடெய்டாவிலிருந்து வெளியேறல்கள் இடம்பெறும் என்பதற்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

சுவீடனில் இணங்கப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹொடெய்டாவிலிருந்து படைகளை விலக்கிக் கொள்வது கடந்தாண்டு டிசெம்பரில் இணங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, ஹொடெய்டாவிலிருந்தான முதலாவது கட்ட வெளியேறலுக்கான விரிவான திட்டமொன்றை இரண்டு தரப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் சபைக்கு மார்ட்டின் கிறிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

யேமன் தலைநகர் சனாவில் ஹூதி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹூதியை கடந்த வாரம் சந்தித்தபோது, ஹொடெய்டா ஒப்பந்ததுக்கு அவரது படைகள் ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டைப் பெற்றதாக மார்ட்டின் கிறிஃபித்ஸ் கூறியுள்ளார்.

ஹொடெய்டா நகரம், அதன் துறைமுகங்களிலிருந்து இரண்டு கட்டங்களாக வெளியேறும் ஒப்பந்தமொன்றை ஐக்கிய நாடுகள் இவ்வாண்டு பெப்ரவரியில் அறிவித்திருந்தபோதும், வெளியேறல்கள் இடம்பெறைவில்லை என்பதுடன் அமைதிப் பேச்சுவார்தைகள் தற்போது வரை தடைப்பட்டுள்ளன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .