2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஆரம்பித்தது வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்

குணசேகரன் சுரேன்   / 2018 மே 31 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றிரவு ஆரம்பமாகியது.

இத்தொடருக்கான வீரர்கள் தெரிவு இடம்பெற்று 12 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அணிகளாவன கிளியூர் கிங்ஸ் (கிளிநொச்சி), தமிழ் யுனைட்டட் (யாழ்ப்பாணம்), ரில்கோ கொங்கியூரொர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் (யாழ்ப்பாணம்), மன்னார் கால்பந்தாட்டக் கழகம், றிங்கோ ரைய்ரென்ஸ் (திருகோணமலை), வவுனியா வொறியர்ஸ், நொதர்ண் எலைய்ட் கால்பந்தாட்டக் கழகம் (யாழ்ப்பாணம்), முல்லைத்தீவு பீனிக்ஸ், வல்வை கால்பந்தாட்டக் கழகம் (யாழ்ப்பாணம்), மட்டு நகர் சுப்பர் கிங்ஸ், அம்பாறை அவெஞ்சர்ஸ், மாதோட்டம் கால்பந்தாட்டக் கழகம் என்பனவே அவையாவன.

முதற்சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் மோதும் வகையில் லீக் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவற்றியிருந்து முன்னிலை பெறும் நான்கு அணிகள் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். தொடர்ந்து தகுதிச் சுற்று இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு அணிகள் தெரிவாகும்.

இத்தொடரில் விளையாடும் 12 அணிகளின் வீரர்களும் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனர்.

இத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு 5,000,000 ரூபாய் பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இத்தொடரின் ஆரம்பப் போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து றிங்கோ ரைய்ரென்ஸ் அணி மோதியிருந்தது. இதில், கிளியூர் அணி, 9-4 என்ற கோல் கணக்கில் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X