2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது சுற்றில் கொலின்ஸ், றோயல்

குணசேகரன் சுரேன்   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தி வரும் 'வடக்கின் கில்லாடி யார்’ விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகளுக்கு குஞ்சர்கடை கொலின்ஸ், ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் என்பன தகுதிபெற்றன.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இத்தொடரின் நேற்று  இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்த்தை கொலின்ஸ் எதிர்கொண்டது. போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு தலா ஒவ்வொரு கோலைப் பெற்று 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டு அதில் 5-4 என்ற ரீதியில் கொலின்ஸ் வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. குறித்த போட்டியின் நாயகனாக கொலின்ஸின் வனஜன் தெரிவானார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றைய முதற்சுற்றுப் போட்டியில், குப்பிளான் ஞானகலா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு றோயல் தகுதிபெற்றது. இப்போட்டியின் நாயகனாக றோயலின் எடிசன் தெரிவானார்.

இந்நிலையில், நேற்று முன்தினம்  இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டிகளில், பொற்பதி, மணியந்தோட்டம் ஐக்கியம், நாவாந்துறை கலைவாணி, அரியாலை ஐக்கியம், புங்குடுதீவு நசரேத், குப்பிளான் குறிஞ்சிக் குமரன் ஆகிய அணிகளை வென்ற மன்னார் ஜோசப்வாஸ், முல்லைத்தீவு சுப்பராங், கிளிநொச்சி உதயதாரகை, மெலிஞ்சிமுனை இருதயராசா, அச்செழு வளர்மதி, நவிண்டில் கலைமதி ஆகிய அணிகள் இரண்டாவது சுற்றுக்குத தகுதிபெற்றன.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இத்தொடரின் ஆரம்ப நாள் முதலாவது சுற்றுப் போட்டிகளில், வதிரி டயமன்ஸ், குருநகர் சென். றொக்ஸ் அணிகளை வென்ற யாழ். பல்கலைக்கழகம், நாவாந்துறை சென். மேரிஸ் அணி ஆகியவை இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X