2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இறுதிப் போட்டியில் இசிப்பத்தன

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு இடையிலான விலகல் முறையிலான றக்பி தொடரான, மைலோ ஜனாதிபதிக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குள், இத்தொடரின் நடப்புச் சம்பியன்களான இசிப்பத்தன கல்லூரி நுழைந்துள்ளது.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில், நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், சென். பீற்றர்ஸ் கல்லூரியை வென்றே, இசிப்பத்தன கல்லூரி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

குறித்த அரையிறுதிப் போட்டியில், 19-12 என்ற புள்ளிகள் கணக்கில், முதற்பாதி முடிவில் முன்னிலை வகித்த இசிப்பத்தன கல்லூரி, 22-20 என்ற புள்ளிகள் கணக்கில், இறுதியில் வென்றது. இசிப்பத்தன கல்லூரி, மூன்று ட்ரைகள், இரண்டு கொன்வேர்ஷன்கள், ஒரு பெனால்டி மூலம் புள்ளிகளைப் பெற்றது. சென். ஜோசப் கல்லூரி, மூன்று ட்ரைகள், ஒரு கொன்வேர்ஷன், ஒரு பெனால்டி மூலம் புள்ளிகளைப் பெற்றது.

இசிப்பத்தன கல்லூரி சார்பாக, டெவின் குணரத்ன, றன்டி சில்வா, றமித் டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரையை பெற்றனர். இரண்டு கொன்வேர்ஷன்கள் மூலம் பெறப்பட்ட புள்ளிகளை, மணில்க ருபய்ரு பெற்றிருந்தார். பெனால்டி மூலம் பெறப்பட்ட புள்ளிகளை, சாமோத் பெர்ணான்டோ பெற்றிருந்தார்.

சென். பீற்றர்ஸ் கல்லூரி சார்பாக, அஞ்சலோ மென்டிஸ், ஜுலியன் சார்ள்ஸ், தீக்‌ஷன தசநாயக்க ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரையைப் பெற்றனர். இதற்கு மேலதிகமாக, கொன்வேர்ஷன் மூலம், பெனால்டி மூலம் பெறப்பட்ட புள்ளிகளையும் தீக்ஷன தசநாயக்கவே பெற்றிருந்தார்.

இந்தத் தொடர், பாடசாலைகள் றக்பி தொடருக்கு, மைலோ நிறுவனம், 25ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்கும் தொடராக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X