2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்விக்கான ஓட்டம்

Editorial   / 2017 ஜூன் 13 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் இளந்தலை முறையினரின் கல்வி வளர்ச்சிக்காக, ஆண்டுதோறும் நடத்தப்படும் கல்விக்கான ஓட்டத்தின் இவ்வாண்டு நிகழ்வு, அடுத்த மாதம் 29ஆம் திகதி, ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டன், அவுஸ்திரேலியாவின் மெல்பேண், கனடாவின் டொரன்ரோ, யாழ்ப்பாணத்தில், வழமை போன்று நடாத்தப்படவுள்ளதாக, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.   

யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், மேற்படி கல்விக்கான ஓட்டம், கடந்தாண்டும், இலண்டன், டொரன்ரோ, மெல்பேண், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.   
வயது வந்தோருக்காக, ஐந்து கிலோமீற்றர் ஓட்டமும், சிறுவர்களுக்காக, இரண்டு கிலோமீற்றர் ஓட்டமும் ஒழுங்குசெய்யப்பட்டது. இந்நிகழ்வில், 500 பேர் வரை கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.   

குறித்த நிகழ்வுக்கு ஆதரவுக் கரம் கொடுத்த பெருமளவான நலன்விரும்பிகளும் சமூக ஆர்வலர்களும் சமூக சேவை நிறுவனங்களும் நண்பர்களும்,  தமது தாராள நன்கொடைகளையும் வழங்கியிருந்தனர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.    

யாழ்ப்பாண இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் 92 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கல்விக்கான ஓட்டம் (Race for Education) நிகழ்வினால், வடக்கு, கிழக்கு, மத்திய மாகாண இளந்தலைமுறை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.   

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில், கணித பாடத்தில் சித்தியடைய முடியாமல் சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் நோக்கில், கல்விக்கான ஓட்டம், 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

மேற்படி ஏற்பாட்டுக் குழுவினரின் செயற்பாடுகள், ஏனைய தகவல்களை
www.rfe.jhc92.com என்ற இணையத்தளம் ஊடாகப் பார்வையிடலாம். அவர்களது பேஸ்புக் பக்கமான Race for Education by JHC Old Boys ஊடாகவும் தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும். அதேநேரம், மேலதிக தொடர்புகளை ஏற்படுத்த விரும்பும் நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள், info@jhc92.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .