2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண மட்ட பளுதூக்கல்: பற்றி எம்பயர் பதக்க வேட்டை

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

2020 / 2021 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மட்ட பளுதூக்கல் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதித்துவப்படுத்திய கழகங்களில் ஒன்றான பற்றி எம்பயர் விளையாட்டுக் கழகம், ஆண்கள் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களுமாக மொத்தம் 11 பதக்கங்களை சுவீகரித்து கழகத்துக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட வீர, வீராங்கனைகள் கலந்துகொண்ட  மேற்படி போட்டி அண்மையில்  திருகோணமலை நகராண்மை கழக மண்டபத்தில் நடைபெற்றது.

பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட வீராங்கனைகள், மட்டக்களப்பு மகாஜனா
கல்லூரி, மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

போதிய வளங்கள் இல்லாத நிலையிலும் மட்டக்களப்பு மாவட்ட வீர, வீராங்கனைகள் இவ்வாறான சாதனைகளை ஏற்படுத்தியமை வரவேற்கத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .