2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கென்ட் கிக் கால்பந்தாட்டம்: அரையிறுதியில் மருதமுனை கோல்ட் மைன்ட்

எஸ்.எம்.அறூஸ்   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:13 - 1     - {{hitsCtrl.values.hits}}

நிந்தவூர் கென்ட் விளையாட்டுக் கழகம், அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் நடத்திவரும், கென்ட் கிக் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழக அணி, 5 - 1 என்ற கோல்கள் அடிப்டையில் காத்தான்குடி பாலமுனை நஷனல் விளையாட்டுக் கழக அணியைத் தோற்கடித்து, அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

போட்டியின் 10 ஆவது நிமிடத்தில், கோல்ட் மைன்ட் கழக  அணி வீரா் சுகைப் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட ஆத்தீப், நஷனல் பின்கள வீரர்கள் இருவரைத்தாண்டி, கோல் கம்பத்துக்குள் மிக வேகமாக அடித்த பந்து, கோலாக மாறியது. இதனால் கோல்ட் மைன்ட் அணி, 1 -0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

போட்டியின் 33ஆவது நிமிடத்தில், நுபைஸ் பரிமாறிய பந்தைப் பெற்றுக் கொண்ட எம்.ரி.அஸ்லம், மிக வலது பக்கத்திலிருந்து கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். கோல் காப்பாளர் பந்தைத் தடுக்க முற்பட்டபோதும், அவரையும் தாண்டி பந்து கம்பத்துக்குள் சென்றது. இதனால் கோல்ட் மைன்ட் அணி, தமது இரண்டாவது கோலையும் பெற்றுக் கொண்டு, 2 -0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

போட்டியின் முழுக்கட்டுப்பாட்டையும் தமக்குள் எடுத்த கோல்ட் மைன்ட் வீரர்கள், மிக ஆக்ரோசமாக நஷனல் அணியின் கோல் கம்பத்தை நோக்கி ஊடுருவினர். இந்தச் சந்தர்ப்பத்தில், 38ஆவது நிமடத்தில், முன்கள வீரா் சுகைப் கொடுத்த பந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர வீரா் நுபைஸ், மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது, கோல் கம்பத்துக்குள் பந்து சென்று, 3ஆவது கோலையும் கோல்ட் அடித்தது. இதனால் 3 -0 என்ற கோல் கணக்கில், கோல்ட் மைன்ட் அணி, ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாவது பாதியில், நஷனல் அணி ஆக்ரோசத்துடன் பந்துகளை எதிரணிப் பக்கம் கொண்டு சென்றபோதும், முன்கள வீரர்கள் கோல் கம்பத்தை நோக்கி அடிப்பதில் தவறுகளை விட்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் பந்து கோல்ட் மைன்ட் அணி வீரா்களின் கட்டுப்பாட்டில் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. போட்டியின் 64 வது நிமிடத்தில், ஜே.எம்.ரஸான், வலது பக்கத்திலிருந்து கொடுத்த பந்தைப் பெற்றுக் கொண்ட எம்.ரி.அஸ்லம், தரை மட்டமாக பந்தை உதைத்தபோது, பந்து கோல் காப்பாளரையும் தாண்டி கம்பத்துக்குள் சென்றது. இதனால் 4ஆவது கோலையும் கோல்ட் மைன்ட் அணி பெற்றதுடன் அஸ்லம், தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

போட்டியின் 78ஆவது நிமடத்தில் வஸீம் சஜாத் பறிமாறிய பந்தை தம்வசம் எடுத்த எம்.ரி.அஸ்லம், பெனால்டி எல்லைக்கு வெளியில் வைத்து வேகமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது, சற்றும் எதிர்பார்க்காத கோல்காப்பாளரையும் தாண்டி பந்து கம்பத்துக்குள் சென்று, கோலாக மாறியது. இதன் மூலம் கோல்ட் மைன்ட் அணி, தமது 5 வது கோலையும் பெற்றுக் கொண்டது.

போட்டி முடிவடைவதற்கு ஒரு நிமிடம் இருக்கின்ற நிலையில், நஷனல் அணிக்குக் கிடைத்த பந்தை பெனால்டி எல்லைக்குள் வைத்து உதைத்தபோது, பந்து கம்பத்துக்குள் சென்று கோலாக மாறியது. இதனால் நஷனல், தமது முதலாவது கோலைப் பெற்றுக் கொண்டது.

எனினும் இறுதியில், 5-1 என்ற அபார ரீதியில், கோல்ட் மைன்ட் அணி வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவானது.

இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக எஸ்.எல்.வை.அறபாத் கடமையாற்றியதுடன், துணை நடுவர்களாக ஏ.எம்.ஜப்ரான், றிபாஸ் ஆகியோர் செயற்பட்டதுடன், நான்காவது நடுவராக எம். றஸீட் செயற்பட்டார்.

 


You May Also Like

  Comments - 1

  • Zamrin Tuesday, 31 October 2017 05:26 AM

    வணக்கம், ஐயா, உங்கள் பத்திரிகையில் உள்ளூர் கால்பந்தாட்ட போட்டிகள் பற்றிய எந்த கட்டுரைகளும் இடம் பெறுவதில்லை. நான் இங்கே குறிப்பிடுவது கழகங்களுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளை. இலங்கையின் முன்னணி 18 கால்பந்தாட்ட கழகங்கள் பங்குபெறும் DCL ( Dialog Champions League) போட்டிகள். இலங்கையின் கால்பந்தாட்டத்தின் வளர்ச்சியில் பங்தாரா் ஆவோம். நான், ஸம்ரின். களுத்துறை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X