2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொக்குவில் சனசமூக நிலைய தொடரின் முடிவுகள்

குணசேகரன் சுரேன்   / 2018 ஏப்ரல் 15 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரொன்று ஆண்டுதோறும் நடைபெறுகின்றது.

அந்தவகையில், இத்தொடரின் 25 ஆவது ஆண்டு தொடர் தற்போது கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்தொடரில், 1996, 2006, 2007ஆம் ஆண்டுகளில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை.

இதுவரையில் நடைபெற்ற 24 தொடர்களில், சென்றலைட்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆகிய அணிகள் தலா நான்கு தடவைகளும் ஜொனியன்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், பற்றீசியன் அணிகள் தலா மூன்று தடவைகளும் மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகம் இரண்டு தடவைகளும் திருநெல்வேலி விளையாட்டுக் கழக அணி ஒரு தடவையும் சம்பியனாகியுள்ளன. இம்முறை தொடரில், மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றுகின்றன.

நியூஸ்ரார்ஸ் அணி வெற்றி 

டிறிபேக் ஸ்ரார்ஸ் அணிக்கும் நியூஸ்ரார்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற டிறிபேக்ஸ்ரார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. 27.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பார்த்தீபன் 80, தர்சன் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மோகனகுமார் 4, தீபன், பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களையக்கைப்பற்றினர்.

190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூஸ்ரார்ஸ் அணி, 27.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கபில் 37, தீபன் 25, றஜிந்தன் ஆட்டமிழக்காமல் 23, தசீபன் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மார்க்சிங் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஸ்ரான்லி அணி வெற்றி

ஸ்ரான்லி அணிக்கும் சென்றல் அணிக்கும் இடையிலான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி, 28.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றஜீவ்குமார் 80, சலிஸ்ரன் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், விதுசன் 4, விணுஸ்கரன் 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 168 ஓட்டங்கள் வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லி அணி, 28.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், சுஜிகரன் 67, பிரசாத் 45 ஓட்டங்களைப் பெற்றனர்.  பந்துவீச்சில், லதுசன் 3, கிரிசாந், தீபன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஓல்ட்கோல்ட்ஸ் அணி வெற்றி

ஓல்ட்கோல்ட்ஸ் அணிக்கும் திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ அணிக்கும் இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓல்கோல்ட் அணி, 30 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சீராளன் ஆட்டமிழக்காமல் 50, ஸ்ரீகுகன் 45, குகன் 41 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அருண்ராஜ் 3, டிசாந்தன், சுபாஸ்கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 257 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய வை.எம்.எச்.ஏ அணி, 14.1 ஓவர்களில் 70 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், சுதாஸ்கரன் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், விதுர்சன் 4, சிறிகுகன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஸ்கந்தா ஸ்ரார்ஸ் வெற்றி

ஹாட்லியற்ஸ் மற்றும் ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியற்ஸ் அணி, 24.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மணிமாறன் 33, பிரதீப் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிரசாந்த் 3, துவாரகன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 152 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணி, 14.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், சதீஸ் 60, மதுசன் 28, துவாரகன் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நிசாந்தன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .