2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது குருநகர் பாடுமீன் வி.க

குணசேகரன் சுரேன்   / 2019 ஜூன் 24 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையில், மண்டைதீவில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்படும் தூய ஒளி வெற்றிக் கிண்ணத் தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

தமது மைதானத்தில் நடைபெற்ற 16 அணிகள் பங்கேற்ற விலகல் முறையிலான குறித்த தொடரின் அண்மையில் இறுதிப் போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தை வென்றே குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டிதொடங்கியதிலிருந்து ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஆட்டத்தில் ஆதிக்கம் தென்பட்டது. இதனால், பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் தாக்குதல் ஆட்டம் முதற்பாதியில் எடுபடவில்லை. முதற்பாதி எவ்விதக் கோல்களும் பெறப்படாத நிலையில் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியில் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் சாந்தன் கோலொன்றைப் பெற அவ்வணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து, பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் கீதன் ஒரு கோலைப் பெற அவ்வணி தனது முன்னிலையை இரட்டிப்பாக்கியது.  இம்முன்னிலையால் வெற்றி பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் பக்கம் உறுதியான நிலையில், ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஜெகன் கோலொன்றைப் பெற்று பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் முன்னிலையை ஒரு கோலால் குறைத்தார்.

எனினும், அதன்பின்னர் மேலதிக எவ்வித கோல்ளையும் பெறப்படாத நிலையில், பாடுமீன் விளையாட்டுக் கழகம், 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக சாந்தனும், சிறந்த கோல் காப்பாளராக மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளரும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .