2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சம்பியனாகியது சென்றலைட்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய 30 ஓவர்கள் கொண்ட தொடரில் சென்றலைட்ஸ் அணி சம்பியனாகியது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 40 ஓவர்களைக் கொண்ட இறுதிப் போட்டியில், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை (கே.சி.சி.சி) வென்றே சென்றலைட்ஸ் அணி சம்பியனாகியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணியின் அணித்தலைவர் ஜெரிக்துசாந் தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

 அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, தொடக்கத்திலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. மத்திய வரிசையில் களமிறங்கிய சத்தியன், சாம்பவன் ஆகியோர் அணிக்கு நம்பிக்கை தர 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சத்தியன் 55, சாம்பவன் 40, பிரதாபன் 23, ஜெயரூபன் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மயூரன் 4, ஜெரிக்துசாந்த் 3, சாள்ஸ், தசோபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு, 154 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி, ஓட்டமெதனையும் பெறாமல் முதல் விக்கெட்டையும் 5.1 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறியது. அதன்பின்னர் களமிறங்கிய செல்ரன், ஜெரிக்துசாந்த், டர்வின் ஆகியோர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல 30.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், டர்வின் ஆட்டமிழக்காமல் 58, ஜெரிக்துசாந்த் 41, செல்ரன் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிரதீஸன் 3, சாம்பவன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இத்தொடரின் நாயகனாக ஏலாளசிங்கம் ஜெயரூபருனும் இறுதிப் போட்டியின் நாயகனாக ஜி. ஜெரிக்துசாந்தும் சிறந்த துடுப்பாட்ட வீரராக ரி. சத்தியனும் சிறந்த பந்துவீச்சாளராக எம். மயூரனும் தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியின் துவாரகசீலனும் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .